
இரும்பு பொல்லால் தாக்கி மனைவியை கொன்ற கணவன்!
குடும்ப தகராறு காரணமாக இரும்பு பொல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கணவனால் தாக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மஹரகம – பமுணுவ பிரதேசத்தில் நேற்று (16) மாலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
33 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரான கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த பெண்ணின் உடல் தற்போது கலுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.