வெற்றி பெறுவதற்கான தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?
தன்னம்பிக்கை என்பது தீராத ஒரு சக்தியாகும்.அறியாமையால் இதை சிலர் இதை அறிந்துகொள்ள போவதில்லை.
என் வாழ்க்கையில் எத்தனை பிரச்னை என்றாலும் அதற்கு காரணம் என் அறியாமை தான் இதுவே உண்மைக்கெல்லாம் உண்மை.
தவறுகளை உணரும் மனிதன் பாடத்தை கற்கிறான் அவன் கற்ற பாடமே அவனுக்கு தன்னம்பிக்கையை தருகிறது.அஞ்சுவது ,தன்னை தானே வருத்திக்கொள்வது இவை அணைத்து அறியாமை தான்.
தன்னம்பிக்கையை எந்த ஒரு கொடிய கஷ்டமான சூழல்களிலும் மறக்காமல் இருக்கும் மனிதன் உலகம் போற்றத்தக்க வாழ்வது நிச்சயம் தானே.
சிறுவர்கள் ஒரு முறை ஓட்டப்பந்தயத்தில் தோற்றாலும் மீண்டும் ஆர்வமுடன் போட்டியில் கலந்து கொள்வர். ஓடி ஜெயிக்க வேண்டும் என்ற ஆசையுடன் ஓட வேண்டும் என்ற ஆர்வம் . அந்த விளையாட்டின் மேல் உள்ள ஆர்வம் நம்பிக்கயை அதிகரிக்கிறது அவனை முயற்சிக்க மீண்டும் மீண்டும் தூண்டி வெற்றி வாகையை சூட வைக்கிறது.
தன்னம்பிக்கையை எவ்வாறு வளர்த்துக்கொள்வது :
1) தினமும் காலை மாலை உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி மனோதைரியத்தை மற்றும் தன்னம்பிக்கையை வளர்கிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
2)விடா முயற்சி மற்றும் பயிற்சிகள் தேவை,தோற்க தோற்க தான் ஜெயிக்க தூண்டும் .அதனால் எந்தவொரு கலையையும் ஆர்வத்துடனும்,உயரிய நோக்கத்துடனும் ,விருப்பத்துடனும் கற்கவேண்டும்.
3)வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்றுக்கொள்வது சிறந்தது. தோல்வி இல்லாமல் வெற்றிக்கு மரியாதை இல்லை.
4)கீலே விழாமல் தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்ள தெரியப்போவதில்லை.என்வே நாம் ஆசிரியராக விட்டாலும்,அதில் பயில்பவராக விட்டாலும் ,பார்வையாளராக கூட முயற்ச்சிக்கலாம்.
5)நல்ல மனிதர்களுடன் மட்டும் பழகுவது.நல்ல வழியில் மட்டும் செல்வது.நல்லதை மட்டும் செய்வது தன்மேல் நம்பிக்கையை வளரச்செய்யும் .
6)தன்னை பற்றி தானே நன்றாக தெரிந்துவைத்திருப்பது, அதன் மூலம் அடுத்தவர்கள் துன்பத்தை போக்குவது.
7)தன்னம்பிக்கையை பெற பயத்தை வெல்வது முதல் படி யாகும் .
8)நன்மை தீமை அறிந்திருப்பது அவசியம். தேவையற்ற செயல்களில் வரும் வினையை அறிந்து கால்வைக்காமல் இருக்கவேண்டும் .
9) தனிமையில் ஞானத்தை வளர்ப்பது.
10)காலத்தை மதிப்பது.
வாழ்க்கைமுறை தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.
எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்