சோம்பேறித்தனத்தை வெற்றிபெறுவது எப்படி?
சோம்பேறி தனத்தை இல்லாதொழிப்பது எப்படி?
நீங்கள் எப்பொழுதும் சோம்பேறி தனமாக இருப்பதாக உணர்கிறீர்களா? அப்படியானால் இந்தப்பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும். வாழ்க்கை முறை எனும் தொடரின் முதல் பதிவாக சோம்பலை எவ்வாறு வெற்றிகரமாக இல்லாதொழிப்பது பற்றிய உத்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். தற்போதைய வேகமான வாழ்க்கைமுறையின் விளைவாக தோன்றும் நெருக்கடிகள் காரணமாக ஏற்படும் பக்கவிளைவாக சோம்பல் அமைகின்றது. எப்பவும் சோம்பலாக இருப்பதற்கு பலகாரணங்கள் இருக்கலாம். அது ஓவ்வொருவருக்கும் மாறுபடும்.
இங்கு சோம்பல் எனும் பெரும்தடையை வெற்றிகொள்வது பற்றிய 8 முக்கிய உத்திகள் தரப்படுகின்றன. இவற்றை சரியான முறையில் கவனத்தில் பின்பற்றும்போது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை உணரமுடியும்.
1. உங்களுடைய இலக்குகளை சிறியதாக அமைத்துக்கொள்ளுங்கள்
எப்பொழுதுமே நாங்கள் அடைவதற்குரிய இலக்குகளை சிறியதாக வைத்துக் கொள்ளவேண்டும். பெரிய இலக்கை தீர்மானித்து வைக்கும் போது அதனை அடைவது பற்றி என்னும் போதே எமக்குள் சந்தேகம் வர ஆரம்பிக்கும். இதனை சாதிப்பதற்கு எனக்கு திறமை இருக்கின்றதா என்றவாறான சிந்தனைகள் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம். அதுவே தடைகற்களாக அமைந்துவிடலாம்.
பெரிய இலக்குகள் இருக்குமிடத்து அதனை அடைவதற்குரிய ஏணிகளாக பல சிறிய இலக்குகளை தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
2. குறித்த இலக்கானது உங்களால் தெரிவுசெய்யப்பட்டதாக இருத்தல் அவசியம்
குறித்த இலக்கானது உங்களுக்கு முக்கியமானதாக இருக்கவேண்டும். மற்றவங்களுக்கு அது முக்கியமானதாக இருக்கக்கூடாது. உதாரணமாக உங்கள் பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் நீங்கள் நன்றாக படிக்கவேண்டும் என விரும்புகிறார்கள் என்பதற்காக நீங்கள் படிக்கவேண்டும் என யோசித்தால் உங்களால் சிறப்பாக படிக்கமுடியாது.
அவ்வாறு மற்றவர்களுக்காக உங்கள் இலக்கை தீர்மானித்தல் சோம்பேறித்தனத்தை ஏற்படும். நீங்களாகவே உங்கள் நன்மைக்காக படிக்கவேண்டும் என்பது போன்று உங்கள் மனம் சொல்வதை இலக்குகளாக அமைப்பது அவசியம்.
3. வேலை செய்யவேண்டிய இடத்திற்கு செல்லுங்கள்
குறித்தவொரு வேலையை செய்வதற்கு முதற்படியாக அதற்கென தீர்மானிக்கப்பட்ட இடத்திற்கு நகரவேண்டும். உதாரணமாக 7 மணிக்கு படிப்பதாக முடிவு செய்திருந்தால் தினமும் குறித்த நேரத்துக்கு குறித்த மேசைக்கு செல்லவேண்டும். படிக்கிறீர்களோ இல்லையோ முதலில் இதனை கடைபிடிக்க வேண்டும். பின்னாட்களில் நீங்களாகவே படிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
தினமும் ஜிம்க்கு போக நினைத்துக்கொண்டிருப்பீர்கள். அனால் அதனை தாமதப்படுத்தியிருப்பீர்கள்.எனவே முதலில் அந்த இடத்துக்கு போவதை உறுதிசெய்யுங்கள்.அதன்பின்னர் மற்றவிடயங்கள் தானாகவே நடக்கும்.
4.வாழ்க்கையில் விடயங்களை ஒழுங்குபடுத்தி (Organize) வைத்திருக்கவேண்டும்
தேவையில்லாத விடயங்கள் உங்கள் மேசையில் இருந்தாலும் சரி வாழ்க்கையில் இருந்தாலும் சரி அதனை தூக்கி எறிந்துவிடுங்கள். பயனற்ற விடயங்களை உங்களுடன் வைத்துக்கொள்வீர்களானால் தேவையான விடயங்கள் கண்ணுக்கு புலப்படாமல் போய்விடலாம்.
ஒரு இலக்கொன்றை அடைவதற்கு எத்தனை தேவையில்லாத விடயங்களில் கவனம் செலுத்துகிறீர்கள் என ஆராயுங்கள். முக்கியமான 4-5 விடயங்களை கருத்தில் எடுத்து குறித்த இலக்கை அடையமுற்படுங்கள். இதனால் சோம்பேறித்தனம் உங்களை நெருங்காது.
5. சோம்பேறித்தனத்தை மாற்றமுடியாத இயல்பாக எப்பொழுதும் எண்ணாதீர்கள்
சோம்பேறித்தனத்தை காரணம் காட்டி எந்தவொரு விடயத்திலிருந்தும் தப்பிவிடலாம் என நினைக்கக்கூடாது.பொதுவாக பலர் எனக்கு இந்த வேலையைசெய்ய சோம்பேறித்தனமாக இருக்கின்றது என்று சொல்லியே விலகிவிடுகின்றனர். இது தவறான அணுகுமுறையாகும்.
இனி வரும்நாட்களில் யாராவது ஏன் இந்தவேலையே செய்யவில்லை எனக்கேட்டால் சோம்பேறித்தனத்தை காரணம்கூறாதீர்கள். சோம்பேறித்தனத்தை வெற்றிபெறுதல் வேலைகளில் இருந்து பின்வாங்குவதை தவிர்ப்பதில் இருந்து தான் ஆரம்பமாகும்.
6. Checklist தயாரித்துக்கொள்ளுங்கள்
இன்று இந்த வேலைகளை செய்து முடிக்கவேண்டும் அல்லது இந்த மாதத்தில் செய்து முடிக்கவேண்டும் என்றவகையில் Checklist தயார்செய்து வைத்திருக்கவேண்டும். அதனை அடிக்கடி எடுத்து பார்த்து அதற்கு அமைவாக வேலைகளை செய்யவேண்டும்.
இவ்வாறு அடிக்கடி பார்ப்பதன்மூலம் குறித்த விடயங்கள் உங்கள் மூளையில் பதிந்துவிடும். எனவே பின்னர் சோம்பேறித்தனத்தை பார்க்காமல் Checklist இல் உள்ள வேலைகளை முடிப்பதிலேயே கவனம் செலுத்துவீர்கள்.
7. உணவு, தூக்கம் சரியான அளவுகளில் இருத்தல்
தேவையான சக்தி மற்றும் தேவையான ஓய்வு உங்களுக்கு இல்லை எனில் உங்கள் இலக்குகளை அடைவதில் இடர்பாடுகள் வரும். இந்த வேலையை செய்து முடித்துவிட்டு சாப்பிடுகிறேன் அல்லது இந்தவேலைக்காக சாப்பிடாமல் இருக்கின்றேன் போன்ற வார்த்தைகள் அபத்தமானவை.
போதுமான சக்தி இல்லாத போது உங்கள் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கமறுக்கும். காலையில் தாமதமாக எழுந்திருக்கும் பழக்கத்தை இல்லாதொழிக்கவேண்டும். சரியான நேரத்துக்கு இரவில் தூக்கத்துக்கு சென்றால் இந்த பிரச்சினை தோன்றாது.
8. தினமும் உடல்சார்ந்த பயிற்சியில் ஈடுபடல்
உங்கள் உடல் ஒத்துழைக்கும் அளவிலாவது தினமும் பயிற்சி செய்யவேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது அசதியாக இருந்தாலும் அந்தநாளை சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கு காலையில் செய்யும் பயிற்சிகள் உதவும்.
எமது Youtube சேனலை Subscribe செய்ய கீழே உள்ள Button ஐ அழுத்துங்கள்.
9. மேலதிக உத்திகள்
A.சோம்பேறித்தனம் வாழ்க்கையில் இருந்தால் எப்பொழுதும் முன்னேறமுடியாது என அடிக்கடி உங்களுக்கே கூறிக்கொள்ளுங்கள்.
B.ஒரு செயலை செய்யும்போது அதிலுள்ள கஸ்ட்ங்களையும், தடைகளையும் நினைக்காமல் அதனால்கிடைக்கும் நன்மைகளை எண்ணிப்பார்க்கவேண்டும்.
C.சோம்பேறித்தனத்தால் குறித்தசெயலை செய்யாமையால் ஏற்படும் பாதகமான விளைவுகளை எண்ணுங்கள். இது உங்கள் சோம்பேறித்தனத்திலிருந்து மீண்டுவர உதவும்.
D.சோம்பேறித்தனமில்லாமல் வேலைசெய்வதை உங்கள் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மாறும்வரை முயற்சிசெய்யவேண்டும்.
E.நீங்களே உங்களை ஊக்குவித்துக்கொள்ளவேண்டும். உங்களை பற்றி மிகவேனும் நன்றாக அறிந்த ஒரே நபர் “நீங்கள்” தான்.
வாழ்க்கைமுறை தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜ்ர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.