வாட்ஸ்அப்பில் தடுப்பூசி சான்றிதழ் பெறுவது எப்படி?
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அதற்கான சான்றிதழை இனி வாட்ஸ்அப் செயலியில் பெற முடியும். இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியில் MyGov Corona Helpdesk chatbot மூலம் செயல்படுத்தப்படுகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் வாட்ஸ்அப் செயலியில் MyGov Corona Helpdesk chatbot அம்சத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. பெருந்தொற்று காலக்கட்டத்தில் போலி செய்தி பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு இதனை அறிமுகம் செய்தது.
பின் இந்த அம்சம் கொண்டு அருகாமையில் உள்ள தடுப்பூசி மையங்களை அறிந்து கொள்ளும் வசதி சேர்க்கப்பட்டது. அந்த வரிசையில் தற்போது தடுப்பூசி சான்று பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் செயலியில் தடுப்பூசி சான்றிதழ் பெறுவது எப்படி?
கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெற முதலில் ஒருவர் குறைந்தபட்சம் தடுப்பூசியின் முதல் டோசை செலுத்தியிருக்க வேண்டும்.
1 – முதலில் மொபைல் போனில் +91 9013151515 என்ற எண்ணை சேமித்துக் கொள்ள வேண்டும். வாட்ஸ்அப் செயலியில் MyGov Corona Helpdesk என தேட வேண்டும்.
2 – அடுத்து வாட்ஸ்அப் செயலியின் MyGov Corona Helpdesk-இல் ‘COVID Certificate’ அல்லது ‘Download Certificate’ என டைப் செய்து அனுப்ப வேண்டும்.
3- உங்களின் மொபைல் எண்ணிற்கு 6 இலக்க ஒ.டி.பி. வரும். இதனை 30 நொடிகளுக்குள் பதிவிட வேண்டும்.
4 – இனி கோவின் (CoWIN) வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட அனைவரின் எண்களும் காணப்படும். இதில் உங்களுக்கு யாருடைய சான்றிதழை பெற வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்.
5 – சான்றிதழ் வாட்ஸ்அப் மூலமாகவே பி.டி.எப். (PDF) ஆக அனுப்பப்பட்டு விடும். இதனை மிக எளிமையாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.