வட்டார முறையில் எவ்வாறு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்? – எளிய விளக்கம்
Advertisement: உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான FACEBOOK விளம்பரங்களை நியாயமான கட்டணத்தில் செய்து தருகின்றோம். குறித்த விளம்பரங்களை நீங்களே செயற்படுத்துவதற்கான ஆலோசனை சேவைகளையும் பெறமுடியும். தொடர்பு: 0771297907
வட்டார முறையில் எவ்வாறு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள் என்பது தொடர்பான எளிமையான விளக்கம்.
இந்த தேர்தல் முறை புரியாதவர்களுக்காக !
🗣 கலப்பு முறை என்றால் என்ன?
🗣 அது எப்படி கணக்கு பார்க்கப்படுகிறது?
🗣 இதில் பெண்களும் கட்டாயம் போகனுமா?
👉 இவற்றுக்கான விளக்கம் என்ன
இப்ப உதாரணத்துக்கு நல்லூர் தொகுதியை எடுப்பம். அதுல ஒரு 12 வட்டாரம் பிரிச்சிருக்கு என்று எடுத்துகொள்ளுங்க. இப்ப இந்த கலப்பு முறையில எப்படி வரும் என்றால்.
முதல்ல வட்டாரம் எல்லாம் கூட்டி 60 சதவீதமாக கணக்கெடுப்பாங்க; பிறகு அதோட சேர்த்து விகிதாசர முறையிலும் 40 சதவீதம் தெரிவு செய்வாங்க.
அதாவது நம்மட பாசையில் சொல்ல போனால், 12 வட்டாரத்துக்கும் 12 பேர், அதோட சேர்த்து போனஸா 8 பேர்! ஆக மொத்தம் 20 பேர் சபைக்கு போவாங்க!!
அவ்ளோ தான் கணக்கு!
இப்ப தேர்தலுக்காக கட்சிகள் வேட்புமனுத் தாக்கல் செய்றப்போ, ஒவ்வொரு வட்டாரத்துலையும் ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை நியமிக்கும்.
நாங்கள் விரும்புற கட்சிக்கு வோட்டு போடுவம். இப்ப அதில எந்த கட்சி அதிகமாக வோட்டு எடுக்குதோ அந்த கட்சி அந்த வட்டாரத்துல வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
அப்ப அந்த 12 பேரையும் தெரிவுசெய்து முடிஞ்சிடும்
சரி இப்ப மற்ற 8 ஆசனங்களும் எப்பிடி தெரிவு செய்வாங்க? அதுக்கு என்ன செய்வாங்க ?
எல்லா வட்டாரத்துலையும் எல்லா கட்சிகளும் எடுத்த மொத்த வோட்டுகளை கூட்டுவாங்க. அதாவது ஊர்ல அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளை கூட்டுவாங்க.
உதாரணத்துக்கு அப்பிடி கூட்டி ஒரு 15,000 வோட்டுகள் வருது என்று எடுத்துக்கோங்க!
இப்ப அந்த 15,000 வோட்டையும் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கையான 20 ஆல பிரிப்பாங்க. அப்டி பிரிச்சா 750 வரும்.
இப்ப அந்த 750 வோட்டுத்தான் ஒரு ஆசனம் கிடைப்பதற்கான ஆகக்குறைஞ்ச வோட்டு! சரியோ? இப்ப என்ன செய்வாங்க என்றால்,
ஒவ்வொரு கட்சியும் எல்லா வட்டாரங்களையும் சேத்து மொத்தமா எத்தின எத்தின வோட்டு எடுத்திருக்கு என்று பார்ப்பாங்க.
உதாரணத்துக்கு இலங்கை தமிழரசுக் கட்சியை (ITAK) எடுப்பம். அந்த கட்சி எல்லா வட்டாரங்களையும் சேர்த்து ஒரு 6000 வோட்டு எடுத்திருக்கு என்று வச்சிக்கொள்வோம்.
இப்ப இந்த 6000 வோட்டுக்கும் எத்தனை ஆசனம் கிடைக்கும் என்று கணக்கு பார்ப்பாங்க. அப்படி என்றால், இந்த 6000 ஐயும் 750 ஆல பிரிப்பாங்க. அப்படி பிரிச்சா 8 வரும். அதனுடைய அர்த்தம் என்ன என்றால் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு (ITAK) மொத்தம் 8 ஆசனங்கள் போய்ச் சேரனும்.
இப்ப ITAK எத்தின வட்டாரத்தில வெற்றி பெற்றிருக்கு என்டு பார்ப்பாங்க. உதாரணத்துக்கு அவங்க 6 வட்டாரத்துல வெற்றி பெற்றிருந்தால், அந்த ஆறையும் கழித்துவிட்டு அவங்களுக்கு போய் சேர வேண்டிய மிச்சம் 2 ஆசனங்களும் அந்த போனஸ் லிஸ்டில இருந்து வழங்கப்படும்.
இன்னம் ஒரு உதாரணம் சொல்லனும் என்டா
ஒரு சுயேட்சை குழு எலக்சன்ல நிக்குது என்று வச்சிகோங்க. இப்ப அவங்க ஒரு வட்டாரத்துலயும் வெற்றி பெறல்ல என்று எடுப்பம்.
ஆனால்,
எல்லா வட்டாரங்களையும் சேத்து அவங்களுக்கு ஒரு 800 வோட்டு கிடைச்சிருக்கு என்று எடுத்தால், அவங்களுக்கும் போனஸ் லிஸ்டில இருந்து ஒரு ஆசனம் வழங்கப்படும். ஏன் என்டால் அவங்க ஒரு ஆசனத்துக்கான ஆகக்குறைஞ்ச வோட்டு எண்ணிக்கையான 750 எடுத்திருக்காங்க!!
ஆகவே இதில எல்லா கட்சிகளுக்கும் எல்லா வகையிலையும் வெற்றி பெறலாம்.
ஒரு கட்சிக்கு ஒரு வட்டாரத்துல மட்டும்தான் வாக்கு இருந்தாலும் ஆசனம் கிடைக்கும் வாய்ப்பிருக்கு. அப்டி இல்லாம ஊருக்குள்ள பரவலாக வாக்குகள் இருந்தாலும் ஆசனம் கிடைக்கும் வாய்ப்பிருக்கு.
இதுல லிஸ்ட் போடுறத்தில இன்னொரு விசயமும் இருக்கு. அது என்ன என்றால்
ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒவ்வொரு கட்சி சார்பாகவும் ஒவ்வொரு ஆள் நியமிக்கப்பட்டு ஒரு லிஸ்டு போடுவாங்க தானே?
ஆமாம்!
அதுக்கு மேலதிகமாக இன்னுமொரு போனஸ் லிஸ்டும் நிரப்பி கொடுக்கப்படும். அதாவது எங்களுக்கு போனஸ் ஆசனம் கிடைக்கும் பட்சத்தில் நாங்க இதுல இருந்து ஆக்கள் நியமிப்போம் என்று கொடுப்பாங்க.
ஆனா அதுல சுவாரஷ்யம் என்ன என்றால், கட்டாயம் அந்த லிஸ்ட்ல இருந்து தான் போனஸ் ஆசனத்துக்கு ஆக்கள் போடனும் என்று கட்டாயம் இல்ல. வட்டாரத்துல தோல்வியடைந்த ஆக்களையும் போடலாம்.
சரி அவ்வளவுதான் விஷயம்.
இப்ப, அந்த பெண்கள் ஆசனங்கள் தொடர்பான விளக்கம் என்ன?
கட்டாயம் 25 சதவீதம் சபைக்கு பெண்கள் நியமிக்கப்படவேணும் என்று சொல்றாங்களே அப்படி பார்த்தால் அந்த 20ஆசனங்களில் 5 ஆசனங்கள் பெண்களா இருக்கனுமா? அப்டின்னு நீங்க யோசிக்கிறது நியாயம்.
ஆனால், இதைப்பற்றி எல்லா கட்சிகளும் பயப்பட தேவையில்ல
ஏன் என்றால்! 3 ஆசனங்களுக்கு மேலதிகமாகவும் மொத்த வாக்குகளில் 20% ஆன வாக்குகளுக்கு மேலதிகமாகவும் பெறுகின்ற கட்சிகள் மட்டும்தான் அந்த கணக்குக்குள் உள்வாங்கப்படுவார்கள்.
ஆகவே அந்த லிஸ்டுக்குள்ள வாற கட்சிகளில் பெண்கள் வெற்றி பெறாத பட்சத்தில், அவர்களின் போனஸ் லிஸ்டிருந்து கட்டாயம் பெண்கள் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
சில நேரங்களில் பெண்கள் எண்ணிக்கை 25%ஐ விட குறையவும் வாய்ப்பிருக்கு.
கட்சிகள் எடுக்கன்ற ஆசனங்களின் நிலைப்பாட்டை பொறுத்து தேர்தல் ஆணையம் அதனை அனுமதிக்கும்.
Advertisement: உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான FACEBOOK விளம்பரங்களை நியாயமான கட்டணத்தில் செய்து தருகின்றோம். குறித்த விளம்பரங்களை நீங்களே செயற்படுத்துவதற்கான ஆலோசனை சேவைகளையும் பெறமுடியும். தொடர்பு: 0771297907