
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் பயன்படுத்திய இளைஞர்கள் கைது!
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஐந்து சந்தேகநபர்களை பொலிசார் நேற்று (2) இரவு கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர்கள் கூடி நிற்பதாக கோப்பாய் பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் 5 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்படவர்களிடம் இருந்து 210 மில்லிக் கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.