உங்களுக்கு மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளதா?
ஐக்கிய ராஜ்ஜியத்தில் 20 மில்லியனுக்கு மேலானோர் உடல் அளவில் இயங்காமல் (செயல்படாமல்) இருப்பதாக பிரிட்டிஷ் இதயம் பவுண்டேஷன் தகவல் வெளியிட்டுள்ளது.
“உடல் அளவில் செயல்படாமல் இருப்பது இதய நோய்களுக்கு உரமிடும்”
இவ்வாறு செயல்படாமல் இருப்போர் இதய நோய்களுக்கு ஆளாகும் ஆபத்து அதிகரித்து ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 1.2 பில்லியன் பவுண்ட் தேசிய சுகாதார சேவையில் செலவை ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ளது.
தன்னுடைய 44 வயதில் மாரடைப்பு ஏற்பட்ட ஹாரியட் முல்வானே, அவருடைய வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி கொள்ள தீர்மானித்தார்.
ஆரோக்கிய இதயங்களின் சொந்தக்காரர்கள் யார்?
“இப்போது திரும்பிப் பார்க்கையில், நான் அதிகமாக இயங்காமல், செயல்படாமல் இருந்தேன் என்று சொல்வேன். நான் இயங்கி செயல்படுவது போல உணர்ந்தேன். ஆனால், அதிக வேலையாக இருந்ததே உண்மை” என்று ஹாரியட் முல்வானே கூறகிறார்.
8.3 மில்லியன் ஆண்களோடு 11.8 மில்லியன் பெண்களை ஒப்பிட்டு பார்த்ததில், ஆண்களைவிட அதிகமாக 36 சதவீத பெண்கள் செயலற்று காணப்படுவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதிக எடையினால் வரும் உயிர் ஆபத்து: பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்
அரசு வழிகாட்டுதல்படி, வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான தீவிர உடல் செயல்பாடு அல்லது இயக்கம் இல்லாத மற்றும் வாரத்திற்கு குறைந்தது இரண்டு நாளுக்கு வலிமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதைதான் “இயங்காமல்” அல்லது “செயல்படாமல்” இருப்பது என்று இந்த அறிக்கை வரையறுக்கிறது.
“உடல் அளவில் செயல்படாமல் இருப்பது இதய நோய்களுக்கு உரமிடும்”
வேலை செய்ய ஒரு மணிநேரம் வாகனம் ஓட்டி செல்வது, பின்னர் ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணிநேரம் உட்கார்ந்து இருப்பது என்று மனித வளத்துறை ஆலோசகராக ஹாரியட் வேலை அதிகமான வாழ்க்கைமுறையில் சுழன்று கொண்டிருந்தார்.
அதனை தொடர்ந்து குடும்ப வாழ்க்கைப் பணிகளில் மூழ்கிபோய் விடுவதால், செயல்பாட்டிற்கு அல்லது உடற்பயிற்சிக்கு நேரம் கிடைக்கவில்லை.
“இதுவும் பயிற்சியில் ஒன்றுதான் என்று எண்ணினேன். இன்னொரு சமயத்தில் உடற்பயிற்சி பெறலாம்” என்று அவர் எண்ணி கொண்டார்.
பார்க்க அரிதான அறிவியல் படங்கள்
ஐக்கிய ராஜ்ஜியத்திலுள்ள சராசரியான ஆண்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஐந்தில் ஒரு பகுதியை உட்கார்ந்தே கழிக்கிறர்கள். ஓராண்டுக்கு இது 78 நாட்களுக்கு சமமாகும். பெண்களுக்கு இது ஓராண்டுக்கு 74 நாட்கள் என்பதை பிரிட்டிஷ் இதயம் பவுண்டேன் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது.
ஹாரியட்டுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னர், அறிகுறிகள் அல்லது எச்சரிக்கை சமிக்ஞைகள் எதுவும் ஏற்படவில்லை.
“நான் படிக்கட்டுகளில் ஏறிச்சென்று, பல் துலக்கி படுக்கைக்கு செல்ல தயாரானேன். அப்போது, தீவிர நெஞ்சு வலியை திடீரென அனுபவித்தேன்” என்று அந்த கடினமான தருணத்தை ஹாரியட் விவரிக்கிறார்.
“நொறுக்கப்பட்ட நிறுத்தம்”
“உடனடியாக நாங்கள் ஓர் ஆம்புலன்ஸை அழைத்தோம். இதய நோய்களுக்கு எவ்வளவு விரைவாக நாம் உதவி பெறுகிறோமோ அவ்வளவு அதிக நன்மையை பெற முடியும் என்பதால் அதுதான் சரியான நடவடிக்கையாக இருந்தது”.
எஸ்சிஎடி (SCAD) எனப்படும் ஸ்போலென்டேனியஸ் கரோனரி ஆர்டெரி டிசர்ஷன் என்கிற அரிதான ஆனால், அபாயமான நிலைமையால் ஹாரியட் பாதிக்கப்பட்டிருந்தார். இது முக்கியமாக இளம் பெண்களைத்தான் பாதிக்கிறது.
“இது உங்களுடைய காலுக்கு அடியில் இருக்கின்ற கம்பளியை இழுத்து உருவி எடுப்பது போன்றதாக இருந்தது” என்கிறார் ஹாரியட்.
“ஒரு குறிப்பட்ட திசையை நோக்கி உங்களுடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது என்று எண்ணுகிறீர்கள். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட திட்டம் இருக்கிறது. உங்கள் வாழ்க்கையின் பாதையில் செல்வதை நீங்கள் நம்பிக்கையோடு உணருகிறீர்கள்”.
“நீண்டகால உடல்நல சிக்கல்கள் எதுவும் எனக்கு இருக்கவில்லை. இந்நிலையில் திடீரென இத்தகைய தீவிர சம்பவத்தால் தாக்கப்படுவது என்பது மிகவும் கடினமானது”
“இந்த மாரடைப்பு என்னுடைய வாழ்க்கையில் அனைத்தையும் நொறுக்கப்பட்ட நிறுத்தத்திற்கு குறுகியகாலம் கொண்டு வந்தது. அந்த நேரத்தில் என்னை சுதாரித்து கொண்டு, மீண்டும் என்னுடைய சுயத்தை கண்டறிந்தேன்” என்று ஹாரியட் குறிப்பிடுகிறார்.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் கரோனரி இதய நோய் மூலம் ஏற்படும் காலத்திற்கு முந்தைய 10 இறப்புக்களில் ஏறக்குறைய ஒரு இறப்பு உடல் அளவில் செலற்று இயங்காமல் இருப்பதால் ஏற்படுகிறது.
மாரத்தான் பெண்
ஹாரியட்டுக்கு எற்பட்ட மாரடைப்பு வாழ்க்கைமுறை மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்தியது.
செவ்வாய் கிரகத்திலிருந்து வெளியேறிய காற்று மாயமானது எங்கே?
“நான் செய்து கொண்டிருக்கும் வேலையையும். நடத்திக் கொண்டிருக்கும் வாழ்க்கையையும் பற்றி சிந்திக்க வேண்டும். என்னை இன்னும் மேம்பட்ட முறையில் பொதுவாக பராமரித்து கொள்ள தொடங்க வேண்டும்” என்பது தற்போதைய அவருடைய தீர்மானமாக உள்ளது.
தீவிரமாக செயல்பட தொடங்குவது என்பது மெதுவாகவும், படிப்படியாகவும் தொடரும் வழிமுறை என்பதையும் அவர் ஏற்றுகொள்கிறார்.
ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் அல்லது இதய அறுவை சிகிச்சை செய்த பின்னர் மாறுவாழ்வு பயிற்சி பெறுவதற்று சொல்லப்படும்போது, இங்கிலாந்திலுள்ள நான்கில் மூன்று பகுதியினர் (76 சதவீதம்) உடல் அளவில் இயங்காமல் செயலற்றவர்களாக கருதப்படுகின்றனர்.
சோமாலிய கடற்கொள்ளையர் கைவரிசை: இந்திய சரக்குக் கப்பல் கடத்தல்
உடல் அளவில் செயல்படாமல் இருப்பது உலக அளவில் 5 மில்லியன் இறப்புகள் ஏற்பட காரணமாக இருப்பதால், அதிக இறப்புக்களை ஏற்படுத்தும் 10 காரணிகளில் ஒன்றாக இது விளங்குவதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.
பிரிட்டிஷ் இதயம் பவுண்டேஷனில் இணை மருத்துவ இயக்குநராக இருக்கும் மருத்துவர் மைக் கனாப்டன் இது பற்றி குறிப்பிடுகையில், “உடல் அளவில் செயல்படாமல் இருப்பது மற்றும் சோம்பலான நடத்தை நிலைகள் ஐக்கிய ராஜ்ஜியத்தில் அதிகமாக உள்ளன. இவை இரண்டும் இணைந்து இதய நலத்திற்கு குறிப்பிட்ட அளவு அச்சுறுத்தல் மற்றும் இறப்பு ஆபத்துக்களை வழங்குகின்ற காரணிகளாக விளங்குகின்றன” என்று கூறுகிறார்.
“உடல் அளவில் சிறப்பாக இயங்கி செயல்பட்டு கொண்டிருந்தால், இதய மற்றும் இரத்த ஓட்ட நோய் ஆபத்தை 35 சதவீதம் குறைக்க முடிகிறது. முன்னதாக இறப்பதை 30 சதவீதம் குறைக்க முடிகிறது.
குரங்குகளுக்கு மாரடைப்பு நோய் வருமா?
தென் கிழக்கு பிரதேசம் மிக குறைவான 34 சதவீதத்தை கொண்டுள்ளது.
இங்கிலாந்தின் வட மேற்கில் போதுமான அளவு செயல்பாட்டுடன் இல்லாத 47 சதவீதம், அல்லது 2.7 மில்லியன் வயதுவந்தோர் பாதிக்கப்படுவதாக பிரதேச அளவில் வேறுபாடுகளையும் இந்த அறக்கட்டளை அறிய வந்துள்ளது.
வட அயர்லாந்திலுள்ள மொத்த வயதுவந்தோர் எண்ணிக்கையில் ஏறக்குறைய பாதி (46 சதவீதம்) அதாவது சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் உடல் அளவில் இயங்காமல் செயலற்று வாழ்ந்து வருகின்றனர்.
உடல்நலம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
எங்களுடைய பதிவுகளை SMS ல் பெறுவதற்கு உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.