இந்தியாவின் படுமோசமான நிலைமையை இலங்கை எட்டியுள்ளதா?
இலங்கையினுள் காணப்படுகின்ற கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 மில்லியன் பேராக காணப்படுவதாக, சுகாதார முகாமைத்துவ ஆலோசகர் பேராசிரியர் சஞ்சைய பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கை மிகவும் அவதானமிக்க நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தொகையுடன் ஒப்பிட்டு, மரண எண்ணிக்கையின் சதவீதத்தை பார்க்கும் போது இலங்கை இந்தியாவிற்கு சமமான நிலைமையை எட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மிக விரைவில் தினசரி மரணங்கள் 100 என்ற எண்ணிக்கை கடக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் மிகவும் பிழையான தீர்மானம் என அவர் கூறியுள்ளார். அல்லது யாரோ ஒருவர் ஜனாதிபதியை பிழையாக வழிநடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனை, இணையத்தள் தொலைகாட்சி கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்
இதேவேளை, இந்த நிலைமையின் கீழ் 5 வருடங்களுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.