
வடக்கு-கிழக்கு முற்றாக செயலிழந்தது!!!
பிந்திய செய்தி, 8.30AM ‘
இதுவரை கிடைத்த தகவல்களின் படி வடமாகாணம், கிழக்கு மாகாணம் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. யாழ்ப்பாணம்,முல்லைத்திவு,கிளிநொச்சி பகுதிகளில் கடைகள் முற்றாக மூடப்பட்டுள்ளன. வீதிகளில் அரச பேருந்துகள் மட்டும் குறைந்தளவான மக்களுடன் இயங்கி வருகின்றன.
இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு ஏற்கனவே தமிழ்த் தேசியக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, புளொட், ரெலோ, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும்,
தமிழ் மக்கள் கூட்டணி, ஈ. பி.ஆர். எல். எவ், தமிழ்த் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,
தமிழ்த் தேசிய பசுமை இயங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்தே ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
அத்தோடு குறித்த ஹர்த்தாளுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கலைப்பீட மாணவர் ஒன்றியம், வடக்கு,
கிழக்கு வணிகர் கழகங்கள், போக்குவரத்துச் சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் என்பன ஆதரவு தெரிவித்துள்ளன.
இதேவேளை, இன்றையதினத்தில் ஒரு வெற்றிகரமான ஹர்த்தாலை அனுஷ்டித்து தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை வெளிக்காட்ட வேண்டும் என்றும் இதற்காக இன்றையதினம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் அரசியல் தலைவர்கள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.