அரசியலில் ஜொலிக்கும் யோகம் உங்களுக்கு உள்ளதா?
பொதுவாக யோகங்கள் என்பதன் அடிப்படை புரிந்திருந்தாலும் அது எம்முடைய ஜாதகத்தில் உள்ளதா என எமக்கு பார்க்க தெரிந்திருக்காது. இந்த பதிவில் உங்கள் ஜாதகத்தை அவதானித்து,குறித்த யோகங்கள் இருக்கின்றதா என நீங்களே பார்ப்பதற்க்குரிய வழிகாட்டல்களை தருகின்றோம்.
மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டது போல் ஜாதக கட்டம் இருக்கும். அதில் “ல” என இருக்கும் கட்டம் ஒருவரின் ஜென்ம லக்கினம் என்றும், சந்திரன் உள்ள கட்டத்தை, அவரின் ராசி எனவும் அழைப்பர்.
நீங்கள் துலாம் ராசி எனின் உங்கள் ராசி கட்டத்தை பார்க்கும் போது, துலாம் கட்டத்தில் “சந்திரன்” காணப்படும்.
மேலும் நீங்கள் உங்கள் ஜாதகத்தை அவதானிக்கும் பொதுபோது விருட்சிகத்தில் குரு இருந்தால், குருவானது லக்கினத்துக்கு 6ம் இடத்தில் உள்ளது என கூறப்படும். இலக்கினத்தை 1 என எடுத்து மணிக்கூடு முள் திசையில் எண்ண வேண்டும்.
மேலும் லக்கினத்துக்கு 5,9 ம் இடங்களை திரிகோணம் என்றும் 1,4,7,10 ஆகிய இடங்களை கேந்திரங்கள் என்றும் அழைப்பர். 6,8,12 ம் இடங்கள் மறைவு ஸ்தானங்கள் எனப்படும்.
குறித்த ராசிக்கட்டத்தில் கிரகங்கள் உச்சம்,ஆட்சி, நட்பு, பகை எனும் நிலையில் காணப்படலாம்.
தற்போது முக்கியமாக உள்ள ஒரு யோகத்தை பற்றி பார்ப்போம். அது உங்கள் ஜாதகத்தில் இருக்கின்றதா என பாருங்கள்.
ஹம்ச யோகம்
இந்த யோகம் தனது ஜாதகத்தில் அமைய பெற்றவர்கள் எப்பொழுதும் நீதி வழி வாழ்பவர்கள். இவர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்களாக இருப்பதுடன் இவர்களின் வார்த்தைகளுக்கு மக்கள் கட்டுப்படுவர்.
இவரது ஜாதகத்தில் மேலும் சூரியனும் செவ்வாயும் பலம் பொருந்தியவர்களாக இருப்பின் இவர்கள் மிக சிறந்த அரசியல் வாதிகளாக புகழ் பெறுவார். மக்களால் கொண்டாடப்படும் தலைவர்களாக மாறுவர்.
ஜாதகத்தில் குருவானவர் லக்கினத்துக்கு 1,4,7,10 ஆகிய கேந்திர தானங்களில் ஆட்சி நிலையில் அமரும் போது இந்த யோகம் ஏற்படும்.
இன்னுமொரு யோகத்தை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இது தொடர்பில் சந்தேகம் இருந்தால் கீழே கமெண்ட் பாக்ஸில் உங்கள் கேள்விகளை கேட்கலாம்.