தலைமுடியை பாதுகாக்க சில வழிகள்
மழைகாலத்தில் கூந்தலை எப்படிப் பாதுகாத்து, பராமரிப்பது என்று சொல்கிறார் அஞ்சலி சமந்தா
‘கூந்தல் சிக்கடைந்து விட்டதா? வெப்பமே காரணம். பலவீன மான கூந்தலா? அதிகப்படியான ஈரமே காரணம். இப்படி மழைக்காலத்தைப் பற்றி கவலைப்பட நிறைய காரணங்கள் உள்ளன. ஆனால் மழைக்காலங்களிலும் உங்கள் கூந்தலை எப்படி சிறப்பாக பராமரிப்பது என்று கற்றுத் தருகிறோம்.
சிக்குத் தொல்லை
உங்களுக்கு வறண்ட கூந்தல் இருந் தால், கூந்தல் ஈரத்தை உறிஞ்சி, முடியை இன்னமும் சிக்கு நிறைந்ததாக மாற்றும். அதை சீவுவது இன்னும் சிரமமானதாக மாறும். கூந்தல், அழுக்கு நிறைந்ததாகவும், ஆரோக்கியமில்லாத தாகவும் தோன்றும். அது பறப்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது.
என்ன செய்யலாம்: உங்கள் கூந்தலை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதன் மூலம் சிக்கை குறைக்கலாம். ஆண்டி-ஃபிரிஸ் தயாரிப்புகளை பயன்படுத்துங்கள். ஷாம்பூ, கண்டிஷனர், சீரம் அல்லது லீவ்-இன் கண்டிஷனர் சேர்த்து பயன்படுத்துங்கள். அடிக்கடி கூந்தலை அலசாதீர்கள், இதனால் கூந்தலில் உள்ள இயற்கை எண் ணெய் அகற்றப்படும். கூந்தலை உரசி தேய்க்காதீர்கள், டவலால் மென்மை யாகத் துடையுங்கள். வெப்பம்தான் கூந்த லின் முதல் எதிரி. அது கூந்தலின் கியூட்டிகிள்களை திறக்கிறது. எனவே, கூந்தலை அலசும் கடைசி முறையாவது, குளிர்ந்த நீரால் அலசவும். கூந்தலை முடிந்தவரை காற்றிலேயே உலர வைக்கவும். டிரையரை ‘கூல்’ செட்டிங்கில் வைத்து பயன்படுத்தவும். “ஒரு ஐயனிக் டிரையர் நல்லது. அது கூந்தலின் கியூட்டிகிள்களை அழுத்த உதவுகிறது. இதனால், சிக்கைத் தூண்டிவிடும் ஈரம் குறையும்,” என்கிறார் மேக்கப் கலைஞர் வித்யா. கூந்தல் கற்றைகளைப் பிரிக்க அகலமான பற்கள் கொண்ட சீப்பை மட்டுமே பயன்படுத்தவும்.
வீட்டு மருத்துவம்
“கூந்தலை மென்மையாகவும், குறைவான சிக்கு நிறைந்ததாகவும் இருக்கச் செய்ய, சூரியகாந்தி எண்ணெயை உள்ளங்கையில் லேசாக தேய்த்துக் கொள்ளவும். பின்னர் அதை கூந்தலில் தேய்க்கவும். அல்லது, கூந்தலின் முனைகளில் தேய்க்கவும்” என்கிறார் அழகுக்கலை நிபுணர் ஷானாஸ் ஹுசைன். “கூந்தலை அலசுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு, தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் மூலம் ஆயில் மசாஜ் செய்தால், அது ஆச்சரியமான பலன்களைத் தரும்” என்கிறார் மூல்சந்த் மெடிசிட்டி தோல் மருத்துவர் குல்ஷாந்த் பனேசர்.
உயிரற்ற கூந்தல்
உங்கள் தலை எண்ணெய்ப்பசை நிறைந் ததாக இருந்தால், வெப்பம் கூந்தலை பலவீனமாக்கவும் உயிரற்றதாகவும் மாற்றும். இதனால் கூந்தல் துள்ளலும் ஜொலிப்பும் இல்லாததாக, ஆரோக்கியம் குறைந்ததாக மாறிவிடும்.
என்ன செய்யலாம்: ‘‘ஒரு வால்யூமைசிங் ஷாம்பூ, கண்டிஷனரை நீங்கள் பயன்படுத்த வேண்டும். கிரீம் போன்ற, மாய்ஸ்சுரைசிங் கண்டிஷனரை பயன்படுத்த வேண்டாம்,’’ என்கிறார் கூந்தல் நிபுணர் நடாஷா சாரா. கூந்தல் கொஞ்சம் அடர்த்தியாகத் தெரிய, லேயர்டு கட்டை முயற்சிக்கவும். ஒட்டாத, லேசான ஸ்டைலிங் பொருள்களைப் பயன்படுத்தவும், இதனால் கூந்தல் எடை அதிகமாக மாறாது.
வீட்டு மருத்துவம்
“ஹென்னா சிகிச்சைகள் உடலையும் கூந்தலையும் சரி செய்ய உதவும். நான்கு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் காஃபி பொடி சேர்த்து, அதனுடன் இரண்டு பச்சை முட்டைகள் மற்றும் தேநீரை, ஹென்னா பவுடருடன் சேர்க்கவும். இந்தக் கலவையை ஒரு பேஸ்ட் போல கலக்கிக் கொள்ளவும். இந்த ஹென்னா கலவையை கூந்த லில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பின்னர் அலசவும். முட்டையைப் பயன்படுத்த நீங்கள் விரும்பவில்லை என்றால், கூடுதலாக தேநீரை சேர்த்துக் கொள்ளலாம்,” என்று பரிந்துரைக் கிறார் ஷானாஸ் ஹுசைன்.
நோய்த்தொற்றுகள்
தலை ஈரமாக இருப்பது பூஞ்சை, பாக் டீரியா போன்ற நோய்த்தொற்றுகளுக்குக் காரணமாக அமையும். உங்களுக்கு எண்ணெய்ப் பசையான தலை இருந் தால், கொப்புளங்கள், அதிகப்படியான தோலுரிதல், எரிச்சல் போன்றவை ஏற்பட்டு, பொடுகு ஏற்படலாம்.
என்ன செய்யலாம்: “உங்கள் உச்சந் தலையை சுத்தமாக வைத்திருக்கவும். இதற்கு கூந்தலை அடிக்கடி அலசலாம்,” என்கிறார் டாக்டர் பனேசர். எப்போதும், ஈரக் கூந்தலை முடிய வேண்டாம்; வியர்வை, அழுக்கு சேர்ந்தால் நோய்த் தொற்றுகள் ஏற்படலாம். எனவே, கூந் தலை நன்றாக உலர விடவும். உங்க ளுக்கு தலையில் நோய்த்தொற்று இருந்தால், கீட்டோகோனசோல் அல்லது ஸெட்.பி.டி.ஓ. உள்ள மருந்து ஷாம்பூவை பயன்படுத்தவும்.
வீட்டு மருத்துவம்
“இரண்டு கை நிறைய வேப்பிலை களை எடுத்து, நான்கு கப் சுடுதண் ணீரில் சேர்க்கவும். இரவு முழுக்க ஊறவைக்கவும். அடுத்த நாள் காலையில், தண்ணீரை வடிகட்டி, அதில் கூந்தலை அலசவும். இதனால் அரிப்பு, நோய்த்தொற்றுகள் தவிர்க்கப்படும். இது பொடுகை எதிர்க்கவும் பயன்படும். ஊறவைத்த வேப்பிலைகளை அரைத்து தலையில் பூசவும். அரை மணி நேரம் கழித்து அலசலாம்,” என்கிறார் ஷானாஸ் ஹுசைன். சாதாரணமாக தலை அரிப்புக்கு எண்ணெய் தடவச் சொல் வார்கள். ஆனால் நோய்த் தொற்று இருந்தால், அதிக எண்ணெயைத் தலையில் பூச வேண்டாம். அது நோய்த்தொற்று பரவலாக உதவும்.