துருக்கியை ஒட்டிய எல்லையை சுவர் எழுப்பி மூடியது கிரீஸ் …ஆப்கான் அகதிகள் வராமல் தடுக்க நடவடிக்கை!
துருக்கியை ஒட்டிய எல்லையில் சுவர் அமைக்கும் பணியை கிரேக்க நாடு முடித்திருக்கிறது.
ஆப்கானில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் வரலாம் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 40 கிலோமட்டர் தூரத்திற்கு நீண்ட தடுப்புச் சுவர் மற்றும் வேலி அமைக்கும் பணிகள் முழுவீச்சில் முடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2010 ஆம் ஆண்டில் சிரியா, ஆப்கான், ஈராக் உள்ளிட்ட நாடுகளின் உள்நாட்டுப் போர்களால் பல லட்சம் அகதிகள் வெளியேறி அண்டை நாடுகளில் அடைக்கலம் புகுந்தனர்.
அன்று முதல் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள கிரீஸ் அரசு சர்வதேச அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் தனது எல்லையை மூடிவிட்டது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.