
மன்னாரில் கிராம அலுவலர் கொலை?
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் என்பவர் நேற்று (3) செவ்வாய்க்கிழமை இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கள்ளியடி ஆத்திமோட்டை பகுதியில் இவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இவரது தலை மற்றும் உடல் பாகங்களில் பெரும் காயங்கள் காணப்படுகின்றன.
அவர் இனம் தெரியாத நபர்களினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெற்று வரும் சட்ட விரோத மண் அகழ்வு உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர் என்று அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.