பட்டதாரி பயிலுநர்கள் ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படுவது தொடர்பில் குழப்ப நிலை?
தற்போது பாடசாலைகளுக்கு இணைக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு எதிர்காலத்தில் ஆசிரிய நியமனம் வழங்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்தகாலங்களில் பட்டதாரி பயிலுனர்களாக இருந்து அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு இவரான சந்தர்ப்பங்கள் வழங்கப்படாமையால் அநீதி இழைக்கப்பட சாத்தியமுள்ளதாக விமர்சித்துள்ளனர். எனவே பட்டதாரி பயிலுனர்களை நேரடியாக ஆசிரிய நியமனம் வழங்கினால் தங்களுக்கும் வாய்ப்பு வழங்குமாறு சங்கங்களுடாக அழுத்தம் பிரயோகித்து வருவதாக அறிய முடிகின்றது.
மேலும் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கும் போது தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சேவையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கல் திட்டம் 2020 இன் கீழ் பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளையும் உள்வாங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் குறித் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பட்டதாரி பயிலுனர்களுக்கென ஒரு போட்டி பரீட்சை நடத்துவதன் மூலம் செய்யப்படுதலே மிக பொருத்தமாக இருக்கும் என சேவையிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஆசிரிய தொழிலுக்கு தகுதியான நபர்கள் உள்வாங்க படமுடியும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார். மேற்படி பட்டதாரி பயிலுனர்கள் கொரோனா சூழ்நிலை காரணமாக சில மாதங்களே பாடசாலைகளில் பயிற்சி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.