பட்டதாரி பயிலுநர்கள், சேவையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவையில் இணைக்கப்படுவார்களா?
தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பயிலுநர் பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளுமாறு கல்வியமைச்சருக்கு அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம் கடிதமொன்றினூடாக கோரிக்கை விடுத்துள்ளது.
நாடு பூராவும் உள்ள பாடசாலைகளில் சுமார் 60,000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகிறது. கொவிட் 19 பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் கற்றலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை நிவர்த்தி செய்யவும் குறித்த 60,000 வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கும் போது தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சேவையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கல் திட்டம் 2020 இன் கீழ் பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளையும் உள்வாங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும்.
அதற்கமைய, தேசிய பாடசாலைகள் , மாகாண பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டுள்ள தகமையுடைய பட்டதாரிகள், வேலையற்ற பட்டதாரிகளை சேவையில் இணைத்தல் திட்டம் 2020 இன் கீழ் 2020.09.02 மற்றும் 2021.02.02 கீழ் மாகாண பாடசாலைகளில் இணைக்கப்பட்ட பயிலுநர் பட்டதாரிகள், பொது மற்றும் மாகாண சேவைக்கு பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் போது ஆசிரியர் சேவைக்கு அவசியமான தகமையுடைய பட்டதாரிகளை அலுவலகங்களை ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர், அவர்களில் தகமையுடையவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்தல், மாகாண மற்றும் பிரதேச மட்டங்களில் நடத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து தற்போது அபிவிருத்தி அதிகாரிகளாக சேவையாற்றுபவர்கள், மேற்கூறப்பட்ட பிரிவுகளில் உள்ள தகுதி தகமையுடைய மற்றும் விருப்பமுடைய பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் உள்வாங்குதல் போன்ற விடயங்கள் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.