
சற்றுமுன்: பட்டதாரி பயிலுனர்கள் அனைவருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம்! ஆசிரிய நியமனம் நேரடியாக இல்லை!!
நாட்டில் 51,000 பயிற்சி பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 01ஆம் திகதிகளில் வழங்கப்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இம்முறை வரவு செலவுத் திட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் படி தற்போது சகலருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்படும் எனவும், பின்னர் போட்டி பரீட்சை மூலமே தற்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்கலாகவுள்ள அனைவரையும் உள்ளடக்கி ஆசிரிய நியமனத்துக்கு கருத்தில் கொள்ளப்படும் என அறிய முடிகிறது.
முழுமையான தகவலுக்கு கீழே உள்ள ஆங்கில பத்திரிகை பதிவை பார்க்கவும்

