
அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பு ஆரம்பம்..!
இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் 40% குறைப்பது தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 40% ஆட்குறைப்பு தொடர்பில் அமைச்சரவை பத்திரமும் அடுத்த மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் சம்பளமற்ற விடுமுறையில் போட்டியிடும் அரச ஊழியர்கள் தேர்தல் தாமதம் காரணமாக மூன்று மாதங்களுக்கு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு சம்பளமில்லாத விடுமுறையில் சுமார் 7100 இற்கும் அதிகமான அரச ஊழியர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள பின்னணியில் அரச ஊழியர்கள் தொடர்பில் உடனடியாக தீர்மானத்தை எடுக்குமாறு எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சிகளின் உறுப்பினர்கள் அரச சேவைகள் அமைச்சரும்,பிரதமருமான தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.