யாழ்ப்பாணத்தில் இளம் பெண் கடத்தல்!
தென்மராட்சி வரணிப்பகுதியில் இளம்பெண்களை கடத்தும் முயற்சி தோற்கடிக்கப்படுள்ளது. சுன்னாகம் பகுதிதியை சேர்ந்த இரு இளைஞர்கள் தமது காதலிகள் இருவரை சந்திக்க கொடிகாமம் வந்திருந்தனர்.இந்நிலையில் மேற்படி இளைஞர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் குழுவினரால் இரு பெண்களும் கடத்தி செல்ல முற்பட்ட சமயம் பெண்ணொருவர் தப்பித்து கொடிகாமம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தற்பொழுது காதலர்கள் என நம்பப்படும் இளைஞர்கள், கடத்தப்பட்ட மற்றைய இளம் பெண் உட்பட ஏனைய சந்தேக நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். இது காதல் விவகாரமா அல்லது வேறு ஏதும் நோக்கம் உள்ளதா என போலீசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.