பெண்களுக்கு தொல்லை – இளைஞர்களுக்கு தர்ம அடி
யாழ்நகர் கலட்டி பகுதியில் தொடர்ச்சியாக பெண்களுக்கு தொல்லை கொடுத்து வந்த இளைஞர்கள் நால்வர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த பகுதியால் சென்று வரும் பெண்களுக்கு அப்பகுதி இளைஞர்கள் அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் குறித்த பெண்கள் அவர்களின் உறவினர்களிடம் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து அவர்கள் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காயமடைந்த நான்கு பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.