
எதிர்காலத்தில் இலவச கல்வி, எட்டாக்கனியாக கூட மாறலாம்!
எதிர்காலத்தில் இந்த இலவச கல்வி, சாதாரண மாணவனுக்கு எட்டாக்கனியாக கூட மாறலாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஹற்றன் கிளை பொறுப்பாளர் ரூபன் தெரிவித்துள்ளார்.
ஹற்றனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ரூபன் மேலும் கூறியுள்ளதாவது, “இலவசக் கல்வி தற்போது வேறு விதமாக நகர்ந்து கொண்டு இருக்கின்றது.
அத்துடன் இலவசக் கல்வியை தனியார் மற்றும் இராணுவ மயப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
இதேவேளை பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள், உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.