தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து கீழே வீழ்ந்து நபர் ஒருவர்மரணம்
வவுனியா- மகாறம்பைக்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து கீழே வீழ்ந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் – நிக்கவரெட்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறித் திருத்தப்பணிகளை முன்னெடுத்துவந்த ஊழியர் நிலைதடுமாறி கீழே வீழ்ந்துள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.