தேர்வின் தோல்விகளின் பின்னும் வாழ்க்கை உண்டு…
“எங்கட பிள்ளைகள் கொஞ்ச வருஷத்துல டொக்டர் ஆகிவிடுவான்! இஞ்சினியர் ஆகிவிடுவான்!பாங்கர் ஆகிவிடுவான்! லோயர் ஆகிவிடுவான்!
உயர்கல்வி கற்கும் மாணவர்கள் காதில் இந்த வார்த்தைகள் ஒலிக்காத தருணங்களே இருக்கமாட்டாது. பெற்றோரின் இந்த ஆசையை நிஜமாக்கவும் தமது கனவை நனவாக்கவும் அல்லும் பகலும் அயராது உழைக்கின்றனர்.
தேர்வுகளின் இறுதி நொடிவரை பல திசைகளில் அலைகள் அடித்தாலும் வெற்றி எனும் கரை நோக்கி பயணித்த படகு தேர்வுகளின் பெறுபேறுகளினால் சுக்குநூறாக உடைந்துவிடும் தருணங்கள்தான் அதிகம். 3ஏ சித்திபெற்றவன் வெற்றிக்களிப்பின் உச்சத்திலும் சாதாரண சித்தி பெற்றவன் வலியின் விளிம்பிலும் நிற்கின்றனர்.
எல்லாம் முடிந்து விட்டது, இனி எம் வாழ்வில் விடியலே இல்லை என்று வாழ்வையும் மாய்க்கத் துணிகின்றனர். 3ஏ சித்தி பெற்றால் மட்டுமா வாழ்க்கை… இல்லவே இல்லை. 3எஸ் சித்தியுடனும் சிகரம் தொட்டவர்கள் பலர் உள்ளனர்.
அனுபவமே சிறந்த ஆசான்
வீழ்வது அவமானமல்ல, வீழ்ந்தே கிடப்பதுதான் அவமானம். ஒருமுறை தோல்வி கண்டுவிட்டேன் மீண்டும் ஒருமுறை முயற்சித்துத்தான் பார்ப்போம் என்ற தன்னம்பிக்கை உள்ளவர்கள் மீண்டும் முயற்ச்சிப்பதில் தவறில்லை.
இனிமேல் முடியாது என்று துவண்டவர்கள் வேறு துறைகளில் பார்வையை செலுத்தவேண்டுமே ஒழிய தவறான முடிவு எடுத்துவிட்டோம் என கவலை கொள்ளக்கூடாது. ” நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்தே பிறக்கின்றன,
ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கின்றது” என பில்கேட்ஸ் கூறுவது போன்று நாம் பெற்ற அனுபவங்களை சிறந்த ஆசானைக் கொண்டு தொடர்ந்து முயற்சித்திட வேண்டும்.
சாதிப்பதற்கு துறைகள் உண்டு
குறிப்பிட்ட பாடங்களைக் கற்றால் மட்டுமே நாம் கௌரவமான வேலையில் அமரலாம் என நினைப்பது முட்டாள்த்தனமாகும்.
இன்று பல்கலைக்கழக பாடத்தெரிவில் ஏராளமான புதிய பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, அவற்றின் அர்த்தம், நமது நாடு குறிப்பிடப்பட்ட துறைகள் சார்ந்து அல்லது புதிய மாற்றங்களுடனான புத்தாக்க தொழில் முனைவுகளை எதிர்நோக்கியுள்ளது என்பதாகும். நாமும் முயற்சித்தால் புத்தாக்க தொழில்களை நோக்கி நகரலாம்.
இலக்கு ஒன்று, ஆனால் பாதைகள் பல
வெற்றி எனும் முடிவிடத்தை அடைந்திட பல பாதைகள் உள்ளன.எல்லோரும் பயணிக்கின்றார்கள் என்று நாமும் அவர்களை பின்பற்றாமல் எமக்கான பாதையை நாமே தேர்ந்தெடுக்க வேண்டும்.
எமது பாதையில் சென்று வெற்றி எனும் இலக்கை அடைந்திட முயற்சியை மூலதனமாகவும் கடின உழைப்பை துணையாகவும் கொண்டு தன்னம்பிக்கை எனும் ஒளிசுடருடன் முன்னேறிச் செல்வோம், வெற்றி நிச்சயம் நம் வசமாகும்.
எல்லோரின் இலக்கும் வாழ்வில் வெற்றி எனும் சிகரம் தொட்டு பிறர் புகழும் வண்ணம் வாழ வேண்டும் என்பதே!
வாழ்க்கைமுறை தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.
எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்