
காதலர் தினத்தில் மனைவியுடன் உறவு கொண்ட கள்ளக்காதலன் மீது தாக்குதல்
பிரிந்து வாழும் மனைவியுடன் காதலர் தின இரவில் தகாத உறவு, கொண்ட காதலனை தடியால் அடித்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குற்றச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் 35 வயதான வெத்தகல, கலவானை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொத்துபிட்டிய, பத்தினாவத்த பகுதியில் காதல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் தடியால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் நடந்த வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்த பெண், தனது கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையிலேயே வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
காதலர் தின இரவில், குறித்த பெண்ணும் அவளுடைய காதலனும் வீட்டில் இருந்தபோது, அவரது கணவர் எதிர்பாராதவிதமாக அங்கு வந்து சேர்ந்துள்ளார். இதனால் வாக்குவாதம் உருவாகி, கணவர் தடியால் தாக்கியதில், அந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலின் போது, வீட்டில் இருந்த பெண் பயந்து வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த நபர் கலவானை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (15) உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக 39 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொத்துபிட்டிய பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.