நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடு நீடிப்பு!
நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் அடுத்த மாதம் 7 திகதி வரை நீடிக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் ஜோன்ஸ்டர் பெர்ணான்டோ நாளைய தினத்தில் நாடு முற்றிலும் திறக்கப்படாது என்றும், எனினும் வீடுகளுக்குத் தேவையான பொருட்களை வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே சென்று வாங்கிக் கொள்ளமுடியும் என்றும் தெரிவித்தார்.
அதன்படி நாளை இரவு 11 மணிக்கு அமுலாகின்ற பயணத்தடை வரும் 31ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மீண்டும் 31ஆம் திகதி முதல் அமுலாகின்ற பயணத்தடை ஜுன் 4ஆம் திகதி அதிகாலை தளர்த்தப்படும் எனவும், மீண்டும் 5ஆம் திகதி இரவு 11 மணிமுதல் 7ஆம் திகதி அதிகாலை 04 மணிவரை பயணத்தடை அமுலில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.