எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து : 307 கடல் உயிரினங்கள் உயிரிழப்பு
இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் கடந்த மே மாதத்தின் பிற்பகுதியில் எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தையடுத்து ஜூலை 23 நிலவரப்படி மொத்தம் 307 கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கப்பல் தீ விபத்தினையடுத்து 258 ஆமைகள், 43 டொல்பின்கள் மற்றும் ஆறு திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அரசாங்க ஆய்வாளர் திணைக்களம் இந்த விவகாரம் குறித்த அறிக்கையை நேரடியாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் கடல் உயிரினங்களின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் உறுதியாக கூறப்படவில்லை.
இந் நிலையில் சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர் டாக்டர் அனில் ஜசிங்க அந்த நேரத்தில் கடல் உயிரினங்கள் இறப்பதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என்றும், இது தொடர்பான விசாரணைகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் கூறியுள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.