
யாழில் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!
யாழில் வீதியில் வைத்துக் கொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கைதடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த, வீதிகளுக்கு தார் செப்பனிடும் வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நாவற்குழிக்கு அருகில் உள்ள பிரதான வீதியில் வைத்து நேற்று மாலையளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் அறிந்து குறித்த இடத்திற்கு வந்த யாழ். மாநகரசபையின் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.