நாடு உடன் முடக்கப்பட்டாலும் 10 நாட்களில் கோவிட் பரவல் விதியை மாற்ற முடியாது!
இலங்கையின் முழு மருத்துவத்துறையும் நெருக்கடியில் உள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தமது பிரதான செய்தியில் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உடனடியாக முடக்கப்பட்டாலும் கூட எதிர்வரும் 10 நாட்களில் கொவிட் வைரஸ் பரவும் விதியை மாற்ற முடியாது என்று முன்னணி மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளாக மேற்கோள்காட்டி குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாடு தழுவிய முடக்கலை விதிக்க இன்னும் எந்த முடிவும் இல்லை. ஆனால் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
டெல்டா மாறுபாடு எந்த மாகாணங்களில் பரவியுள்ளது என்பதை அடையாளம் காண வைத்தியர்கள், இப்போது வரிசைப்படுத்தலை அதிகரித்துள்ளனர்.
அத்துடன் டெல்டா பிளஸ் தொடர்பாகவும் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். டெல்டா மாறுபாடு மிகவும் அதிகமாக இருக்கும் போது இயற்கையாகவே அது உருமாறி டெல்டா பிளஸ் ஆகிறது.
இலங்கையில் இது இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும் மருத்துவர்கள் விழிப்புடன் நிலைமையை கண்காணித்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.