fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

எலன் மஸ்க்கின் வெற்றிக்கதை!

எலன் மஸ்க் எனும் தொழில்நுட்ப மன்னனைப் பற்றித் தெரியாதவர்கள் குறைவு. ஏனெனில் புத்தாக்கம் புனைபவர்கள், இளைஞர்கள், புது வியாபார முயற்சியைத் தொடங்க இருப்பவர்கள் நிச்சயமாக அறிந்து வைத்திருப்பார்கள்.

தற்போது கூட தன்னுடைய மகளுக்கு X Æ A-12என புரியாத பெயரை வைத்து பரபரப்பைக் கிளப்பியவர், டெஸ்லா எனும் உலகின் மிகப்பெரிய எலக்ரிக் கார், ஸ்பேஸ் எக்ஸ் எனும் விண்வெளி ஆராய்ச்சிக் கூடம், பேபால் என்ற மின்னியல் பணம் செலுத்தும் ஊடகம் எனும் பல வகையான வியாபார முயற்சிகளுக்கு சொந்தக்காரர்.

இளைஞர்களுக்கு அவர்கூறும் அறிவுரைகள் சில வேளை எம்மை கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்கத் தூண்டும். அதே நேரம் வெற்றி பெற்றவனின் ஆலோசனைகள் எம்மை தூரநோக்கோடு பார்க்க உதவும்.

விளம்பரப்படுத்துவதிலேயே உங்கள் முழுப் பணத்தையும் செலவளிக்காதீர்கள்

எலன் மஸ்க் ஒரு பொருளை உருவாக்கும் போது அதனுடைய முடிவு பலனளிக்குமா என தனக்குத்தானே கேட்டுக்கொள்வாராம்.அவ்வாறு இல்லையெனில் உடனே அப்பொருளை செய்வதை நிறுத்தி விடுவார்.

ஏனெனில் ஒன்றைப் புதிதாக உருவாக்கும் போது அது வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அதை உருவாக்கும் எமக்கு வேண்டும். சிறந்த பொருளைப் பயன்படுத்தியவர்களின் வாய்மொழி மூல சிபாரிசு மிகவும் பெரியாதாயிருக்கும்.

ரிஸ்க் எடுப்பதற்க்கு மிகவும் சிறந்த வயது உங்கள் இளமைப்பருவமாகும்

ஏனெனில் இளவயதாயிருக்கும் போது எமக்கு பொறுப்புகள் குறைவாக இருக்கும், ரிஸ்க் என்பது எம்மை மட்டுமே பாதிப்பதாக இருக்கும்.அதே சமயம் நாம் சில முடிவுகளை புதுமையாகவும், அதிரடியாகவும்,உறுதியாகவும் எடுக்க முடியும்.ஆனால் எமக்கு வயது செல்லும் போது பொறுப்புகள் அதிகமாகும், எமது முடிவுகள் எம் குடும்பத்தையோ,பிள்ளைகளையோ பாதிக்கும்.

எனவே இளம் கன்று பயமறியாது என்ற எமக்கு ஏற்கனவே தெரிந்த பழமொழிதான் எலன் மஸ்கினதும் தாரக மந்திரம் என்பது ஆச்சரியம் தான்.

குறை கூறுவதை நிறுத்துங்கள்

நாம் பல நேரங்களில் போக்குவரத்து நெரிசலை குறித்து குறைகூறுவோம்.ஆனால் எலன் மஸ்க் சுரங்க வழிப்பாதையை அமைத்து அதற்கான தீர்வை வழங்கினார்.அதாவது நாம் எவ்வாறு எமது முயற்சியின் பலன் அமைந்திருக்க வேண்டுமோ அதற்கேற்றாற் போல் எமது எதிர்காலத்தை இப்பொழுதிலிருந்து கட்டியெழுப்ப வேண்டும் என்கிறார்.

குறைகள் பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.ஏனெனில் குறைகள் ஒவ்வொன்றும் ஒரு புதுமையான தீர்வை கண்டுபிடிக்க உதவும்.

எப்பொழுதும் எமது பங்காளருடன் நல்ல உறவைப் பேணவேண்டும்

எமது பணியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் எமது குடும்பமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.எலன் எப்பொழுதும் தனது வாடிக்கையாளர்களுக்கு ட்விட்டர் மூலம் நன்றி கூறுவார்,இதுவொரு சிறிய வெளிப்பாடாக இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு உணர்வை ஏற்படுத்தும்.

எலன் கூறுகிறார், நாம் எமது பணியாளர்களை நன்கு கவனித்தால் அவர்கள் எமது வியாபாரத்தைப் பார்த்துக் கொள்வார்கள்.எமது அலுவலகத்திலிருந்து வெளியே வந்து என்ன எமது பணியாளர்களுடன் சிறிது நேரம் கதைத்து நல்ல உறவை பலப்படுத்த வேண்டும்.நாம் எம்முடைய பணியாளர்களின் மனதை வென்றால் அவர்கள் எமது வாடிக்கையாளர்களை வெல்வார்கள் என்பதாகும்.

தற்கால ட்ரென்ட்களை பின் தொடராமல் அவற்றை உருவாக்கவேண்டும்

ஏற்கனவே உள்ள போக்குகளைப் பின் தொடர்தல் என்பது எவ்விதத்திலும் புதுமையைத் தோற்றுவிக்காது.மாறாக நாம் புது ட்ரென்ட்களை உருவாக்க வேண்டும்.

வைரல் என்பது தற்செயலாக நடப்பதில்லை மாறாக அதற்குப் பின்னால் வாடிக்கையாளரின் மனப்பாங்கு,இளைஞர்களின் விருப்பம்,சூழலியல் தாக்கங்கள் மற்றும் இலகுவாக மக்களுக்கு விளங்குதல் என்பன இருக்கின்றன.எனவே நாம் வைரல் என்ற தற்போதைய நிலைமையை எமது முயற்சிகளில் இணைத்து கொள்ளவேண்டும்.

வாழ்க்கைமுறை தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்

எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்

    எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்

    எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்

    இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

    Back to top button