எலக்ட்ரிக் வாகனங்கள் – தற்போதைய புது வரவு!
எலக்ட்ரிக் வாகனங்கள் என்பது எதிர்காலத்துக்கான ஒரு புது அலை என்பது மட்டுமல்லாமல் அது எமது உயிரைக் காப்பாற்றக் கூடிய ஒரு திட்டமுமாகும்.
எலக்ட்ரிக் வாகனங்கள் காலநிலையைப் பாதுகாக்கும்
இன்று சூழல் மாசடைதலில் வாகனங்களும் அவை வெளிவிடும் புகையும் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது. அதிக வாகன நெரிசல் மற்றும் எரிபொருள் பாவனை எம்மைச் சுற்றியுள்ள சூழலை முழுவதுமாக பாதித்துள்ளது. வீதியோரங்களில் உள்ள மரங்களின் நிலைமையைப் பார்க்கும் போதே எமக்கு அவை புரிந்திருக்கும்.
வாகனங்கள் வெளிவிடும் புகை எமது சூழலுக்கு மட்டுமல்ல எமக்கும் தீங்கு விளைவிப்பவையாகும். ஆஸ்த்மா, மூச்சுக்குழாய் அழற்ச்சி, கான்சர் மற்றும் அகால மரணங்கள் கூட ஏற்படுகின்றன.
இன்று கொவிட் 19 எனும் கொடிய வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் வேளையில் காற்று மாசடைதல் நீண்டகாலப் போக்கில் உலகின் அதிக உயிரிழப்புக்கு காரணமாக இருக்கும் என ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே எலக்ட்ரிக் வாகனங்களின் பூச்சிய வீத புகைப்பாவனை சூழலின் நண்பன் என்றே கூறலாம்.
எலக்ட்ரிக் வாகனங்கள் எரிபொருளுடன் ஒப்பிடும் போது மிகச்சிறிய அளவிலான கார்பன் தடத்தைக் கொண்டுள்ளது
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மின்சாரமானது எலக்ட்ரிக் கிரிட்களிலிருந்து வருகின்றது. இன்றைய நவீன உலகில் மின்சாரமானது சூரியஒளி, அணுமின் உலைகள், காற்று போன்ற சூழலுக்கு இயைபான மூலங்களிலிருந்து பெறப்படுகின்றது.
எரிபொருளை விட செலவு குறைந்ததாக இருப்பதால் எலக்ட்ரிக் வாகனங்களின் விலையும் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கின்றது மேலும் எமது அரசாங்கமானது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான விலைகளில் வரிச்சலுகைகள் அளித்திருப்பதை நாம் அறிவோம்.
எலக்ட்ரிக் வாகனங்கள் எமது வீடுகளில், அலுவலகங்களில் அல்லது செல்லும் வழிகளில் சார்ஜ் ஏற்ற முடியும்
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜ் ஏற்றும் இடங்கள் இன்று எல்லா இடங்களிலும் காணலாம். ஆனால் எமது இடங்களில் இவை இன்னும் பிரபலமாகவில்லை.
மேலும் எரிபொருள் நிலையங்களை நோக்கி ஓடவேண்டிய தேவையில்லை. எமது வீட்டிலேயே சார்ஜ் போடுவதனால் மேலதிக செலவுகளைக் குறைக்க முடியும்.
பயணம் செய்யும் போது மிகச்சிறந்த அனுபவத்தை தரும்
வாகனம் முழுமையாக மின்சாரத்தில் இயங்குவதினால் எமது வாகன கட்டுப்பாடுகளுக்கு மிகச்சிறந்ததும் உடனடியானதுமான துலங்களை உணரமுடியும். அதாவது வாகனம் ஸ்டார்ட் ஆனதுமே அது முழுமையாக எமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.
வேகம் என்பது கண்ணிமைக்கும் நேரத்தில் அதிகரிக்கும். வாகன நெரிசல்களில் அடிக்கடி கியரை மாற்றும் போது எரிபொருள் வீணாகும் என்ற பயம் தேவையில்லை. மிக இலகுவானதும் நகரங்களில் பயணிப்பதற்கு ஏற்றதாகவும் இவ்வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தின் போக்குவரத்து முன்னோடியாக இருக்கப்போவது எலக்ட்ரிக் வாகனங்களேயாகும்
உலக காலநிலை மீதான அதிகரித்த கரிசனை, உலக வெப்பமயமாதல் போன்றவை எலக்ட்ரிக் வாகனங்களின் தேவையை அதிகரித்துள்ளன. எனவே உலக நாடுகள் இவற்றின் மீதான முதலீடுகளை அதிகரித்து பல்வேறு வரிச்சலுகைகளையும் ஊக்குவிப்புகளையும் வழங்குகின்றன.
அதில் எமது நாடும் இது தொடர்பில் பல்வேறு கொள்கைத் தளர்வுகளைக் கொண்டுள்ளதை நாம் அறிந்து கொள்ளலாம். மனிதர்களாகிய நாம் நாளுக்கொரு தடவை எம்மை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றோம்.
இயற்கையிடமிருந்து அனைத்தையும் பெற்றுக்கொண்ட நாம் அதன் மேல் சிறிதளவு இரக்கம் காட்டுவோமேயானால் அது எமக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியோடு எம்மைப் பாதுகாத்துக்கொள்ளும்.
தொழில்நுட்பம் தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.