அரச தொழிலில் இருந்து விலகாமல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரை எவ்வாறு கேள்விக்குட்படுத்தலாம் ?
தகமையீனம்
Sri Lanka Constitution Article 91(1)(d)(vii) பதவி நிலை அல்லது அதற்கு மேற்பட்ட தரத்திலுள்ள உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது.
E Code- Chapter XXXII Section 1.3 படி அவ்வாறான உத்தியோகத்தர்கள் பதவியிலிருந்து விலகியே போட்டியிடமுடியும்
எங்கே வழக்கிடலாம் ?
மேன்முறையீட்டு நீதி மன்றில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 21 நாட்களுக்கு மனு தாக்கல் செய்ய வேண்டும் (Parliamentary Election Act S. 108(1)
யார் வழக்கிடலாம் ?
குறித்த வேட்பாளரின் கட்சியில் போட்டியிட்டவர் அல்லது குறித்த தேர்தலில் போட்டியிட்ட ஏதேனும் ஒரு வேட்பாளர்
வழக்கு தாக்கல் செய்யவேண்டிய மேலதிக விபரங்கள் Parliamentary Election Act S. 91 தொடக்கம் 108 வரையான பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது