மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள தினேஷ் ஷாஃப்டரின் கொலை வழக்கு
இலங்கையில் மிகவும் சர்ச்சைக்குரிய கொலை குற்றச்சாட்டாக கருதப்பட்ட, தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் குறித்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட அனைத்து தொடர்புடைய கோப்புகளும் உடனடியாக மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
சிஐடியின் மூத்த அதிகாரி ஒருவர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய கருத்துக்களின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
பொரளை கல்லறையில் மர்மமான முறையில் இறந்த நிலையில் கிடந்த தினேஷ் ஷாஃப்டரின் மரணம் குறித்த பொலிஸ் விசாரணை தொடங்கும் என்று அந்த அதிகாரி கூறியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கோப்புகளை விசாரிக்க இரகசிய பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றம் விரைவில் வெளிச்சத்திற்கு வரக்கூடும் என்றும் அதிகாரி கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.