
டெங்கு நோய்த்தாக்கம் வேகமாக உயர்வு – அமைச்சர்
இந்த வருடத்தில் இதுவரை 19,825 பேர் டெங்கு தொற்றால் பிடிக்கப்பட்டிருப்பார்த்தாக இனம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். இதில் 22 பேர் ஏற்கனவே இறந்துள்ளனர்.
அண்மைய பருவமழை காரணமாக இந்நிலை ஏற்பட்டிருப்பதாக மேலும் கூறியிருந்தார். உள்ளுராட்சி மட்டத்தில் டெங்கு தடுப்பு பிரிவின் செயற்பாடுகளை அதிகரிக்குமாறும், சுற்றாடல் போலீஸ் தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.