
பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி!
புத்தளம் மாவட்டம் – நவகத்தேகம, அத்துறுபாலயாகம பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட 10 வயது சிறுமி பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் தாயுடன் இருந்த போது நேற்று சனிக்கிழமை குறித்த சிறுமி காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, அயலவர்களுடன் இணைந்து அவரது பெற்றோர் சிறுமியை தேடியுள்ளனர். எனினும், சிறுமியை காணாத நிலையில், நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, இன்று அந்த பகுதி மக்களுடன் இணைந்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போதே அந்தப் பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றுக்குள் சிறுமி சடலமாகக் கண்டறியப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.