கவனமாக இருக்கவில்லை என்றால் மரணம் நிச்சயம் : விசேட மருத்துவ நிபுணர் எச்சரிக்கை!!
இம்முறை கவனமாக இருக்கவில்லை என்றால் நிச்சயம் மரணம் ஏற்படும் என விசேட மருத்துவர் நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான அவர், கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இம்முறை கவனமாக இருக்கவில்லை என்றால், உங்களுக்கு மரணம் ஏற்படுவது நிச்சயம். அரசாங்கத்தின் தவறாக இருந்தாலும் பொது சுகாதார பரிசோதகரின் தவறாக இருந்தாலும் பேருந்து சாரதியின் தவறாக இருந்தாலும் நோயை அடையாளம் காணமுடியாமல் போனால் இறப்பது நாமே.
தம்மை பாதுகாப்பதே நமது கடமை. நான் ஒரு வருடமாக தடுப்பூசி போடாமல் நோயை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருந்தேன். என்னால் நோயாளிகளுடன் இருந்தும் கவனமாக இருக்க முடிந்தது.
உங்களாலும் இதனை செய்ய முடியும். சரியாக சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றினால் தப்பிக்க முடியும் எனவும் மருத்துவர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.