
யாழில் 3 நாள் தொடர் காய்ச்சலினால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!
யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் திடீர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உடுபிட்டி நாவலடியைச் சேர்ந்த பஜிதரன் சப்திகன் (வயது-6) என்ற உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் தரம் ஒன்றில் பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளார்.
சிறுவனுக்கு கடந்த மூன்று நாட்களாக காய்ச்சலுடன் கடும் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் நேற்று இரவு 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் உயிரிழப்புக்கு காய்ச்சலே காரணம் என மருத்துவக் குறிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்த திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், சிறுவனின் சடலத்தை பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க பணித்துள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.