
வீட்டில் குப்பைகளுக்கு தீ மூட்டும் போது எரிகாயங்களிற்கு உள்ளான பெண் மரணம்!
கடந்த 20ஆம் திகதி வீட்டில் குப்பைகளுக்கு தீ மூட்டும் பொழுது தவறுதலாக மண்ணெண்ணெய் உடையில் ஊற்று பட்டதனால் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த குடும்ப பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தாயான சுஜீவன் தர்சிகா வயது 28 என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் உத்தரவிடப்பட்டுள்ளது.