மகன் தூக்கில் தொங்கியதை பார்த்து மனமுடைந்து அதே இடத்தில் உயிரை விட்ட தாய்!
வீட்டில் மகன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை பார்த்த தாயார் சிலமணி நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பகல் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜயங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
புதூர் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஞானப்பிரகாசம் மைக்கல் என்பரும் அவரின் தாயாரான 70 வயதுடைய ஞானப்பிகாசம் பாக்கியம் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டவர் புதூர் பிரதேசத்தில் திருமணம் முடித்து வாழந்து வருவதாகவும் இரண்டு தினங்களுக்கு முன்னர் மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி ஏறாவூர் ஜயங்கேணியிலுள்ள அவரது தாயார் தனிமையில் வாழ்ந்து வரும் வீட்டிற்கு சென்று தங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவதினமான இன்று பகல் 11 மணியளவில் மகனை காணவில்லை என தாயார் தேடிய நிலையில் அறைக்கதவு பூட்டப்பட்டுள்ளதையடுத்;து உறவினர்களின் உதவியுடன் அறைக்கதவை உடைத்து உடசென்றபோது அங்;கு கூரையில்; கயிற்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை கண்டுள்ளார். இதனையடுத்து புற்றுறோயினால் பாதிக்பட்டிருந்த அவரது தாயருக்;கு சில மணி நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்தையடுத்து அவரும் உயிரிழந்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் உயிரிழந்த இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசர் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.