டேரன் சமியை நிற ரீதியாக அவமானப்படுத்திய இஷாந்த் ஷர்மா!
IPL போட்டிகளின் போது தன்னையும் இலங்கை சகலதுறை வீரர் திசார பெரேராவையும் சிலர் “கழு” என நிற ரீதியாக அவமதித்ததாக மேற்குஇந்திய தீவுகள் அணியின் முன்னால் தலைவர் டேரன் சமி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர்கள் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் இவருடன் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய இஷாந்த் சர்மா தனது பழைய இன்ஸ்டாகிராம் பதிவில் சமியை “கழு” என குறிப்பிட்டு புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் இஷாந்த் சர்மா மன்னிப்பு கேட்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.