
மன்னார் கடற்பரப்பில் கரையொதுங்கும் ஆபத்தான பொருட்கள்!
இலங்கை கடற்பரப்பில் கடந்த வாரம் தீபற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்காலை பொலிஸ் நிலைத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பிலேயே இன்று காலை சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறிய உருண்டைகள் கடல் கரையேரங்கள் முழுவதிலும் சிதறிக்கிடப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன் அப்பகுதிக்கு பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை அதிகாரிகள் சென்று கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்ரி பொருட்கள் தொடர்பாக பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.