
இலங்கையில் கோரோனோ பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சம்
இன்றைய திகதிப்படி இலங்கையில் COVID-19 தொற்றால்(Corona Update in Sri Lanka) பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1613ஆக காணப்படுகின்றது. அண்மைய நாட்களில் வைரஸ் பாசிட்டிவாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
நேற்று இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்கள் 47 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதுவரையில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்கள் வைத்தியசாலையில் 822 பேர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரையில் 781 பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போதுவரை 10 இறப்புகள் கொரோனா காரணமாக பதிவாகியுள்ளது.