
இலங்கையில் கொரோனா தொற்று உயர்கிறது!
இன்றைய திகதிப்படி(2020-6-11) இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1869 ஆக காணப்படுகின்றது. அண்மைய நாட்களில் வைரஸ் பாசிட்டிவாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
நேற்று இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்கள் 10 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 8 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த கடற்படையினராவர். ஏனைய இருவரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களாவர். இதுவரையில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்கள் 736 பேர் வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரையில் 1122 பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போதுவரை 11 இறப்புகள் கொரோனா காரணமாக பதிவாகியுள்ளது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்
