இலங்கையில் தீவிரம் காட்டும் கொரோனா; யாழ் உள்ளிட்ட 31 நகரங்கள் முடக்கம்!
நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், இதுவரை 30ற்கும் அதிகமான நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதன்படி யாழ்ப்பாணம் – கொடிகாமம், திருகோணமலை பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்கள், கேகாலை, சிலாபம், அம்பாறை, வெண்ணப்புல, கெக்கிராவ, மொணராகலை, திவுலப்பிட்டிய, தெரணியகல, ஊரகஸ்மங்ஹந்திய, வாத்துவ, பாதுராகொட, ரிகில்லகஸ்கட மற்றும் அலவ்வ ஆகிய நகரங்களே இவ்வாறு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
அதேபோல, கம்பஹா, அம்பலாந்தோட்டை, அம்பலாங்கொடை, மரதஹமுல்ல, வேயங்கொடை, தங்கொட்டுவ, சேருநுவர, பலாபத்வல, உல்பத்த, தங்காலை, பதுளை, பலாங்கொடை, வலப்பனை, பண்டாரவளை, எம்பிலிப்பிட்டிய மற்றும் மாத்தளை யட்டவத்த யேலக்கரய ஆகிய நகரங்களும் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் நாட்டை முடக்குமறு பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில் வார இறுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.