சீனாவில் கொரோனா அதிகரிப்பு: கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்!
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் லாரிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஹெனான் மாகாணத்தில் கடந்த வாரம் 123 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக எர்கி மாவட்டத்தின் முக்கிய சாலைகள், ரயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் மருத்துவமனைகளில் 140 வாகனங்கள் மூலம் இரவு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றன.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.