கொரோனா அச்சம்; யாழின் மற்றுமொரு பகுதியினை முடக்க தீர்மானம்!
கொரோனா பரவல் காரணமாக யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு கிராம அலுவலர் பிரிவினை தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது.
யாழ் மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இணுவில் கிராமத்தில் ஜே190 கலாஜோதி கிராம சேவகர் பிரிவிலும் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இணுவில் கிராமத்தின் ஒரு பகுதியினை தனிமைப்படுத்துமாறு சுகாதாரப் பிரிவினரால் சிபார்சு செய்யப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.