கிளிநொச்சியில் தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் பலி!
கிளிநொச்சியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கொவிட் தடுப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் உயிரிழந்தவர் வவுனியா இறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.