சீனி விலை அதிகரிப்பால் நுகர்வோர் நெருக்கடியில் !
சீனி விலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் நுகர்வோர் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவார காலப்பகுதிக்குள் ஒரு கிலோ சீனியின் விலை 50 ரூபாவால் விலை உயர்வடைந்துள்ளதுடன், தற்போது ஒரு கிலோ சீனியின் விலை 210 ரூபாவாக காணப்படுகிறது.
இது தொடர்பில் இன்றைய தினம் நிதியமைச்சருக்கும், வர்த்தகத்துறை அமைச்சருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனி விலை 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, உணவகங்களில் ஒருகோப்பை தேநீரின் விலையை 25 ரூபாவால் அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.
எனினும், நாட்டில் ஒரு வாரத்துக்கு தேவையான சீனி கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.