அத்துமீறி நுழைவதைத் தடுப்பதற்கு நல்லூர் பின்வீதியில் ஆதனத்தைச் சுற்றி வேலியடைப்பு!
யாழ். மாநகர சபையின் அனுமதி பெறாமல், சபைக்குரிய ஆதனத்தை அத்துமீறிப் பயன்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் நல்லூர் பின் வீதியில் உள்ள ஆதனம் ஒன்று அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின் பகுதியில் பருத்தித்துறை வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக உள்ள யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான ஆதனம் காணப்படுகின்றது.
குறித்த ஆதனம், இதுவரை காலமும் அறிக்கையிடப்படாமல் திறந்த வெளியாகக் காணப்பட்டது.
அத்துடன், இந்த ஆதனத்தைச் சில வர்த்தக நிறுவனங்கள் மாநகர சபையின் அனுமதியுடன் உரிய குத்தகைப் பணம் செலுத்தி தமது பொருட்களின் வியாபார மற்றும் விளம்பர நோக்கங்களுக்குப் பயன்படுத்தின.
இதேவேளை, குறித்த ஆதனத்தை சிலர் அத்துமீறிப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த ஆதனத்தை அறிக்கைப்படுத்திப் பாதுகாக்கும் நோக்குடன் யாழ். மாநகர சபையின் அனுமதியின்றி யாரும் உட்செல்ல முடியாதவாறு ஆதனத்தைச் சூழ முட்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.
.