செவ்வாய் கிரகம் குறித்த புதிய புகைப்படங்களை அனுப்பியது சீன ரோவர்!
செவ்வாய் கிரகத்தின் பரப்பை காட்டும் வகையில் சீனாவின் ரோவர் Zhurong எடுத்த புதிய புகைப்படங்களை சீன தேசிய விண்வெளி அமைப்பு வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் பயணித்து வரும் ரோவர் ஜுராங், செவ்வாயின் மண் பரப்புகள், பாறைகள், மற்றும் கற்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது.
கடந்தாண்டு ஜூலையில் தியான்வென் -1 என்ற விண்கலத்தை சீனா விண்ணில் செலுத்தியிருந்த நிலையில், கடந்த மே15ஆம் தேதி வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. அதனை தொடர்ந்து தியான்வென்னுடன் செலுத்தப்பட்ட Zhurong ரோவர், மே 22ம் தேதி முதல் செவ்வாயில் பயணித்து ஆய்வு செய்து வருகிறது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.