ஆளில்லா கடலடி ஏவுகணைகளை தயாரிக்கிறது சீனா!
மனித வழிகாட்டுதல் இன்றி தானாக இயங்கி எதிரிகளின் இலக்கைத் தாக்கும் கடலடி ஏவுகணைகளை சீனா உருவாக்கி வருகிறது.
டர்பிடோக்கள் எனப்படும் ஏவுகணைகள் பெரும்பாலும் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் மனித இழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் டர்பிடோக்களை பயன்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. இந்த டர்பிடோக்கள் எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை அடையாளம் காணவும், தேவைப்பட்டால் மறைந்திருந்து தாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான சோதனை தைவான் நீரிணையில் சுமார் 30 அடி ஆழத்தில் நடந்தது. இந்தச் சோதனை வெற்றி பெற்றதாக சீனா அறிவித்துள்ளது. யுயுவி என அழைக்கப்படும் இந்த டர்பிடோக்கள் தேவைப்படும் நேரத்தில் தனியாகவும், குழுவாகவும் தாக்கும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.