விண்வெளியில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து சீன ராக்கெட் பூமியில் இன்று விழப் போவதாக தகவல்!
விண்வெளியில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து திரும்பும் சீன ராக்கெட் பூமியில் இன்று விழப் போவதாக தகவல்
விண்வெளியிலிருந்து கட்டுப்பாட்டை இழந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் சீன ராக்கெட் பூமியில் இன்று விழும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விண்வெளியில் சீனா தனியாக தியான் காங் என்ற பெயரில் விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது.
இந்த விண்வெளி நிலையத்துக்கு மிகப்பெரிய கலத்தை கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி லாங் மார்ச் 5-பி என்ற ராக்கெட் மூலம் சீனா செலுத்தியது.
இந்நிலையில் இந்த ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி திரும்பி வந்த வண்ணம் உள்ளது.
இதுகுறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்த சீனா லாங் மார்ச் 5-பி ராக்கெட் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும்போது அதன் பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிடும் என்பதால் வானியல் நடவடிக்கைகள் அல்லது பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை’ என்று தெரிவித்துள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.